பட்டமோ … பட்டம்
சிறு வயதினிலே கட்டுப்பாட்டுக்கே
ஏட்டைப் பிடிச்சி
– பின்
பாட்டன் பட்ட
வாட்டம் படிச்சி
தேர்ச்சி பெற்றேன்.
கல்லூரிக்குக்
கம்பீரத்தோடு
வந்து
காலம் சில போக்கியே
கால் மீட்டர்
காகிதத்தில்
நான்கு எழுத்து
வாங்க வேண்டுமென்று
இரவு பகலாய்
படித்து, வடித்து
நட்ட பயிரின்று
களஞ்சியமாய்
காகிதத்தில் அது.
பொக்கிசம் போல
பாங்காய் இருக்குது
பட்டம் என்னும்
தண்டப்பெயர்.
அதை வாங்கவே
அவன் இன்று
கருப்பு
ஆடை
அணிந்துக்கொண்டு
தலைகவிழ்ந்தே
சென்று
தாளை வாங்குகின்றான்.
ஏன்?
அவன் ஒளிமயமான
வாழ்வு
இன்று முதல்
இருள் மயமாகுமென்று
வாட்டத்தோடே
சென்று வாங்கிடுவான்
அதிலேயே – பின்
மூழ்கிடுவான்
வேலை எனும் –
நல்ல
வேளை வரும் வரை.
அந்த நேரம் வருமோ
இந்நாட்டில்
– சில
வன்பேச்சுக்கும்
பண்பாட்டுக்கும்
இடர்ப்பட்டே அவன்
பெற்ற பெற்ற சிறப்புப்
பட்டம்
சோம்பேறி என்னும்
கொம்பேறிப் பட்டம்.
வேடிக்கை நாட்டிலே
வேலை தேடிச் சென்றான்
வேலையில்லை பலகையிலே
காலியுண்டு பையிலே
என்று
கேட்டிடுவார்
வசூல் இல்லையென்றால்
N.V. பலகையிலே
N.V. என்று கண்டதுமே
அங்கேயும் செல்வான்
அங்கும் என்ன?
N.V. தான் தொங்குது.
சுற்றிச் சுற்றி
அவன்
கற்ற எழுத்துக்களை
ஏறி இறங்கிய
படிகளிலே தேய்ந்ததால்
பட்டம் அது
வட்டமிட்டு பள்ளமானது.
அதனாலே,
வறுமை அவனுக்கே
தஞ்சமானது.
அங்கு, அவன் பெற்ற
பட்டம்
ஏழ்மை என்னும
உயர்ந்த பட்டம்.
Comments
Post a Comment