வாழும் காதல்
காலாட
கையாட
கையோடு தறியாட
தறியோடு நானாட
என்னோடு நாடா
ஓட
நாடாவிலே
நூல் பிரிய
பிரிந்த பின்
ஒன்று சேர
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
காலமெல்லாம் கலந்து
கல்வெட்டாய் இருப்பதற்குக்
காலமெல்லாம் காத்திருப்பேன்.
காலாட
கையாட
கையோடு தறியாட
தறியோடு நானாட
என்னோடு நாடா
ஓட
நாடாவிலே
நூல் பிரிய
பிரிந்த பின்
ஒன்று சேர
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
காலமெல்லாம் கலந்து
கல்வெட்டாய் இருப்பதற்குக்
காலமெல்லாம் காத்திருப்பேன்.
Comments
Post a Comment