பெண்கள்
பெண்கள் … பெண்களே…
பெண்கள் இந்த
மண்ணின் கண்கள்.
இமையே தன்
கண்ணைக் குத்தும்போது
கண்களல்ல அவை
குளங்கள்.
தூசு விழுந்தாலே
கண்கள் குளமாகும்
தூசே ஊசியானால்
கண்கள்…
ஆண் மகனைக் கண்டு
அச்சத்தில் ஓடி
மறையும்
பெண்போல், சூரியனைக்
கண்டு
நிலவும் மறைகின்றதே.
அதனால்தான்
நிலவிற்குப்
பெண்ணை ஒப்பிடுகிறார்களோ.
செடியில் இருக்கும்
மலருக்குச்
செம்மை வாழ்வு
– அது
உதிர்ந்து விட்டாலோ
குப்பைத் தொட்டிக்கே
சொந்தம்
வாசமில்லா மலரையும்
சாமிக்குச் சாத்திவிட்டால்
வணக்கங்கள் பலகோடி
தொட்டால் சா(க்)கடிக்கும்
மின்சாரம் உன்
உடம்பெல்லாம்
பாய்கின்றதோ
அதனால்தான்,
விழி விளக்குகளால்
எங்கள் கண்களை
ஒளியிழக்கச் செய்கின்றாயோ.
பெண்ணே,
நீயே மென்மை,
மேலும் மெருகூட்டுவதற்கு
வெண்மலரையேன்
சூடிக் கொள்கின்றாய்.
அதனாலே,
ஆண்களின்
தன்மைகளை ஏன்
இழக்கச் செய்கின்றாய்.
கோவலன் ஒருத்தியை
தவிக்கவிட்டான்
என்பதற்காக
எங்களைத் தவிக்க
வைக்கின்றாயா?
பெண்கள் இந்த
மண்ணின் கண்கள்
அதனால்தான்
பெண்களின் விளையாட்டு
பொம்மைகளாகின்றோம்
உன், முந்தானைக்
காற்றா என்னை
முந்நூறு நாள்
சிறை கொள்ளும்.
பள்ளியில் படிக்கும்போது
ஔவைப் பழத்திற்கு
அடம்பிடித்தேன்
கிடைக்கவில்லை.
இப்பொழுதுதான்
புரிந்தது
அக்கனிகள் – உன்
அக்கினிக் குண்டத்தில்
வைத்திருக்கிறாய்
என்று.
ஆப்பிள் பழத்திற்கு
ஆடிமாதக் காற்றாய்
அலைந்ததுண்டு,
கிடைக்கவில்லை.
இப்பொழுதுதான்
தெரிகின்றது
உன்னழகுக் கூந்தல்
சிறை வைத்திருக்கும்
கண்ணங்கள் என்று.
தேனிற்காக
பேயாய் அலைந்ததுண்டு
கிடைக்கவில்லை.
இப்பொழுதுதான்
புரிகின்றது
உன் உதடுகளில்
உன்னதமாய் இருக்கிறதென்று.
தேனை மதுவாக்கி
மாது, நீ எனக்களித்தாய்
மயங்கியே ஆடுகின்றேன்
இயங்காமல் விட்டுவிடாதே.
பெண்கள் இந்த
மண்ணின் கண்கள்
துணிந்தால்
நெருப்புக் கோளங்கள்.
Comments
Post a Comment