உண்மையின் விலை

 

இறைவா

என்னை ஏன் படைத்தாய்

எனக்கு அந்த

ஆற்றலை ஏன் கொடுத்தாய்.

என்னிடம் பழகுபவர்கள்

சகோதரத்துடன் பார்க்கின்றேன்

அதனால்

அவர்கள் வாழ்க்கையை உணர்கின்றேன்

நல்லது நடக்குமென்று

உணர்ந்த உண்மையைச் சொல்கின்றேன்

அவர்களோ

அல்லதையே நினைத்து

கேட்டவன்

சபிக்கிறான் என்று

ஒதுக்குகிறார்கள்.

உண்மைக்கு விலை இதுதானா?

இறைவா

என்னை பிறக்க வைத்து

உறங்கிவிட்டாயா?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா