பெருக வேண்டும் வேலை…
பட்சி
ஒன்று பறக்குது
பஜ்ஜி யொன்றைக் கொத்துது
எழுத்தைக்
கூட்டி படிக்கிறான்
எதிர்காலம் நோக்குறான்.
வேலை
தேடி சென்றிடுவார்
வேலையில்லை பலகையிலே
வெறுத்து
வந்து நின்றிடுவார்
வேர்க்கடலை தின்றிடுவார்
வேலை
யொன்று கிடைத்தது
காதலிக்கத் தெரிந்தது
வேலை
கிடைத்த வேளையிலே
வேடிக்கையும் நடந்தது.
பொம்மை
யொன்று வந்தது
பொட்டிட்டு நின்றது, அங்குப்
பொட்டு
தான் நின்றது
பொட்டு இல்லை அதற்கு
எதற்கு
இந்த வேடிக்கை
வதக்கும் இந்த நாட்டிலே
இதற்கும்
வேண்டும் தடை
பெருக வேண்டும் வேலை.
Comments
Post a Comment