காதலுண்டு
வெண்ணிலா வானிலே
வந்தது – என்
கண்ணிலே ஏனது
தெரிந்தது.
என்னிலே ஆசையே
வந்தது – என்
பண்ணிலே கருவாயே
னானாயோ?
தண்ணியில்லா குளத்திலே
நீந்தினேன் – என்
நீச்சலைப் பார்க்கநீ
வந்தாயோ?
வானத்திலே நீ
நடந்து போகின்றாய் – என்
கானத்திலே பொருளாய்நீ
நிற்கின்றாய்.
நீரிலே உன்முகத்தைப்
பார்க்கின்றேன்
நீயில்லை என்றுநான்
தவிக்கின்றேன்.
கண்ணிலே சிறைவைத்துக்
காக்கின்றேன்
திறந்தவுடன் விண்ணிலே
நிற்கின்றேன்.
கோலத்தில் உனைவைத்து
வரைகின்றேன் – நீ
கோளத்தில் அல்லவோ
சுற்றுகின்றாய்
நாயகன் உனைப்பார்த்துப்
பாடுகின்றான்
நாயகியோ உனைவெறுத்துப்
பார்க்கின்றாள்
வானுக்கும் மண்ணுக்கும்
தொடர்புண்டு
கடலுக்கும் கண்ணிற்கும்
உறவுண்டு
இரவுக்கும் பகலுக்கும்
என்ன உண்டு
உனக்கும் எனக்கும்
காதலுண்டு.
Comments
Post a Comment