என்ன வந்ததோ…

 

காற்றிலென் கதையெழுதி

காதலிக்கு அனுப்பினேன் – அந்தக்

காற்றையே அவள் விழுங்கி

புயலாக்கி வீசுகின்றாள்.

 

மாலையவள் நேரமென்று

மாலையோடு காத்திருந்தேன் – அவள்

மாலை நேரம் வரவில்லை

மாலை(குற்றம்)யென்ன வந்ததோ?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா