இன்றைய அரசியல் ஒரு முழுத் தேங்காய். நான் அதை உடைத்தேன். ஆளுங்கட்சி என்றும் எதிர்க்கட்சி என்றும் தனித்தனியே அமர்ந்தது. உடைக்கும்போது கொட்டிய நீர் இந்த மண்ணில்தான் விழுந்தது அதனால், சில சமயம் கூடுகின்றது உள்ளே பார்த்தேன் இரண்டிலும் வெண்மை நிறம். அதைச் சமைக்கலாமென்று துருவினேன். அதுவோ, நம்மையே துருவ ஆரம்பித்துவிட்டது.
Comments
Post a Comment