மார்கழி நீ… வாழி
மார்கழித் திங்களின்று
மாதிரியாய்
வந்துவிட்டது
ஐந்து
ஆறு மாதம் கழித்து
ஐயப்பட்டு
வந்து விட்டது.
இன்று
முதல்
விரதம்
பலர் இருந்திடுவார்
விரக்தி
பலர் செய்திடுவார்
விடியலில்
எழுந்திடுவார்
திருப்பாவை
பாடிடுவார்.
காலை
பனி வேளையிலே
கால்
கடுக்க நடந்திடுவார்
பாடல்
பல பாடிக் கொண்டே
பாடல்
பல பாடுவதால்
பனி,
பிணி பறந்திடும்
மார்கழி
நீ வாழீ.
Comments
Post a Comment