நான் எழுதிய பாட்டு


சுத்திச் சுத்திப் பாட்டெழுத

தத்தித் தத்தித் தாளம் போட்டு

கத்திக் கத்தி ஓசை அமைச்சு

அந்தியிலே நான் நடந்தேன்.

 

துள்ளியோடும் மான்களெல்லாம்

பிள்ளை தேடி ஓடினவே.

 

பகலவனும்

பள்ளி கொள்ள சென்றுவிட்டான்.

 

குயில்களின் கூவலும்

குறையத் தொடங்கின.

 

காகத்தின் நிறத்தை

வேறுபடுத்த முடியலே

 

புல்லைத் தேடும்

பனித்துளிகள்

மெல்லப் படர்ந்தன.

 

தவளையின்

ரீங்காரம் – என்னைத்

தாலாட்ட வைத்தது.

 

மின்மினிப் பூச்சிகள்

என்னைப் பார்த்துக்

கண்ணடிக்கின்றன.

 

தென்றல்

என்னை விட்டுச் சென்றதைக்

கொசுக்கள் தான் உணர்த்தின.

 

அப்பொழுதுதான் தெரிந்தது

இரவு வந்துவிட்டதென்று.

 

சோலைப் பூக்கள்

எனக்குப்

போதையை அளித்தன.

 

போதையில் பிறந்தது

தேனூறும் தமிழாறு.

 

நான்,

தென்றலை இசைக்கழைத்து

தேன் தமிழில் பாட்டெழுதினேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா