இதயமே… ஒரு கோயிலை எழுப்பி வா…
இதயமே
ஒரு கோயிலை
எழுப்பி வா.
கீதமே
அதிலுன்னை
பூஜிக்கின்றேன்.
துன்பங்களை
போக்க நீ
பறந்து வா
நினைவையே
பன்னீராய் – நான்
தெளிக்கின்றேன்
காற்றிலே
தென்றலை – நான்
அழைக்கின்றேன்
தென்றலை
தழுவிட நான்
துடிக்கின்றேன்.
துடிப்பிலே
உன் மூச்சைத்தான்
– நான்
பார்க்கின்றேன்
மூச்சிலே
என் பேச்சைத்தான்
– நான்
தடுக்கின்றேன்.
இதழையே
இனிமையாய்
நினைக்கின்றேன்
இனிமையை
தனியாய் நீ
அளிக்க வா
என் துன்பங்களைப்
போக்க நீ
பறந்து வா – குயிலே
என் துன்பங்களைப்
போக்க நீ
பறந்து வா.
Comments
Post a Comment