தாலாட்டு

 

நான் பாடும் தாலாட்டு

நாக்கினிலே வாதாடும்

நீ பாடும் தாலாட்டோ

நீதிக்கு வாதாடும்.

 

அவன் பாடும் தாலாட்டு

அவணியில் உறவாடும்

அவள் பாடும் தாலாட்டு

அழுகையை நிறுத்தும்.

 

(வேறு)

 

சின்னப் பொண்ணு சிரிக்கின்றாள்

சிந்தனையைக் களைக்கிறாள்

எண்ணம்போல நடக்கிறாள்

என்னைச் சுத்தி அலையுறாள்

 

தண்ணியிலே மிதக்கிறாள்

புட்டிமேலே நிற்கிறாள்

புத்திகெட்டு அலையுறாள்

பத்தினியா நிற்கிறாள்

 

விண்ணைப் பார்த்து நடக்கிறாள்

வீதியிலே சுத்துறாள்

வீதியிலே சுத்துநாள்

வீம்புக்கு  நிற்கிறாள்.

 

அன்னம்போல நடக்கிறாள்

கரந்தபாலைக் குடிக்கிறாள்

மண்மீது படுக்கிறாள்

மன்னவனைத் தேடுகிறாள்.

 

மண்ணைப் பார்த்து நடக்கிறாள்

மது மயங்கி தூங்குறாள்

கல்லைப் பார்த்து நிற்கிறாள்

கண்டவனைப் பார்க்கிறாள்

 

இடை வளைஞ்சி ஆடுகிறாள்

இருண்ட கண்ணா ஆகிறாள்

மல்லிப்பூவப் பார்க்கிறாள்

ரோசாப் பூவா நினைக்கிறாள்

 

புட்டி போட்டு அலைகிறான்

பெண்டாட்டியை மறக்கிறான்

பெண்டாட்டியை மறக்கிறான்

கண்டவளைத் தேடுகிறான்

 

வந்த பக்கம் பார்க்கிறான்

வாடியே நிற்கிறான் – அங்கே

ஆடியே வருகிறாள்

ஆட்டத்தை நிறுத்துகிறான்

 

பக்கம் பார்த்து ஒதுக்குறான்

பட்டமேனி யாக்குறான்

இஸ்டம்போல நடக்குறான்

இளம்பூவாள் துடிக்கிறாள்.

 

இதுகெல்லாம் காரணம்,

 

பகலைப் பார்த்துச் சிரிச்சதா

இரவைப் பார்த்துக் குடிச்சதா

இரவைப் பார்த்துக் குடிச்சதால்

முந்தானையை விரிக்கிறாள்

முந்நூறு நாள் தாங்குகிறாள்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா