காதலின் கோலங்கள்
காலத்தின் காதல்கள்
கலங்கரை விளக்கல்ல
அலங்கோல விளக்கு.
விரும்பி யொருவன்
விரும்பாதவளைச்
செய்யும் காதல்
ஒருதலைக் காதல்.
மனக் காதல்,
இன்பம் கொண்டு
இனக்காதல் வந்ததும்
பிணக்கல் தோன்றும்
காதலிலே
பணக்காதல் முதலில்
கொண்டு
கணக்கிலே தவறு
என்றதும்
விலகல் தோன்றும்
உடனடியாக.
பார்க்கும் பார்வையிலேயே
படியளந்துவிட்ட
உள்ளத்தை
அடியிலே தேடுகின்றான்
அந்த அந்தி மயக்கத்திலே.
Comments
Post a Comment