வந்திடுவாய் மாமழையே
பார்க்க
வந்த மழை
பாராமலே
போனதால்
மாநிலம்
இன்று
வானமே
பார்க்கின்றது.
பார்க்க
வந்த மழைக்கு
கண்ணில்லை
என்பதால்
கண்ணாடி
வாங்கவே
நிதி
திரட்டச் சென்றிட்டார்
எங்கள்,
நீதி
காக்கும் நிதி மந்திரி.
நிதிக்கு
நீதியில்லை என்றிட்டால்
இராணுவத்தோடு
வந்திடுவார்.
மழையே,
நாங்கள்
பட்டது போதும்
நீயும்பட
வேண்டாமென்றே
விரைவாய்
அழைக்கின்றோம்
வந்திடுவாய்
மாமழையே.
Comments
Post a Comment