பனைமரம்
படித்துக் கொண்டு
செல்லும் வழியே
அன்ன நடையாய்
அடிமேலடி வைத்தேன்
பனஞ்செடி என்றொன்று இடையூறு செய்தது
கனநேரம் ஆடிய
அச்செடியின் இலைகள்
கனநேரத்தில் என்னுள்ளம்
குமுற வைத்தது.
கனநேரத்தில் அதுஎன்னை
தடுத்து நிறுத்தியது
கனநேரம் சென்றதும்
பார்வை ஊடுருவியே
கானகத்துப் பாம்பொன்று
குறுக்கே சென்றது
பாம்பென்று அலராமல்
பனையாய் நின்றிருந்தேன்
Comments
Post a Comment