அருகானேனே
நிலவிலே வீடு
கட்டி
கனவிலே போகக்
கண்டேன்
கனவிலே போன பின்னே
உயிருதான் நிற்கக்
கண்டேன்
துளசியாய் வாழ
எண்ணி
அளவிலா இன்பம்
கொண்டேன்
வாழையாய் இருப்போமென்று
வாழ்க்கையைத்
துவங்கினேன் அன்று.
தென்றலைக் கடனுக்கு
வாங்கி
தெருவிலே உலாவ
விட்டேன்
வீட்டிலே சோலை
அமைத்து
காட்டிலே உலாவி
வந்தேன்
காட்டிலே நானும்
அமர்ந்து
அருகாய் போனேன்
இன்று
அருகாய் ஆன பின்னும்
– பசுவும்
வெறுக்க ஆனேனே.
Comments
Post a Comment