குயிலே நீ பாடு
உன், காந்த விழிகள் என்னைக்
கவர்வதேன் – நான்
வடமலையான் இல்லையென்பதற்கு
இதுவும் சாட்சியன்றோ?
நீயொரு பார்வை
பார்த்தபோது
இதயமது நெய்யானது.
ஒரே பார்வை பார்க்கும்போது
உன் கோபக் கனலால்
– அது
உருகி கண்ணீராய்
ஆனது.
அதனாலே,
இதயமே இல்லை
– அதற்கு
அபயம் வேண்டியே
அன்பன் நிற்கின்றேன்.
நான்விட்ட கண்ணீரால்
கங்கை நதி பிறந்தது
– அதனாலே
கடல் மட்டும்
உயர்ந்தது
என் நெஞ்சில்
நீ மட்டும்?
சிவனுக்கு
உடன் பிறந்தவளோ?
நெற்றிக் கண்ணுக்கு
உன்
கொவ்வாயை ஒப்பிடுகின்றாயே?
மயிலே குயிலே
என்று
கூப்பிட முடியலே
– உந்தன்
ஆடல் பாடல் கேட்டு
அவைகள் தோற்றுப்
போனதால்
அந்தக் களிப்பில்
உன்
தொழிலையேன் விட்டுவிட்டாய்.
விசிறிகளின் ஆசை
வீணாகட்டும் என்று
வீம்புக்கு ஏன்
விட்டுவிட்டாய்?
எனக்காகவாவது
மணக்காத நாதத்தையும்
மணக்க வைக்கும்
குயிலே நீ பாடு.
Comments
Post a Comment