துளிராத காதல்…

 காக்க வைத்த கண்கள் இரண்டு

 கானல் மழை பொழிவதைக் கண்டு

காலமெல்லாம் வறண்டிருந்த

காளை, அவன் நெஞ்சினிலே.

 

அத்திப் பூத்த வேளையிலே

அன்னநடை நடந்தவள்

அண்ணமேந்தி நிற்கின்றாள்

அன்னியர்போல் பேசுகின்றாள்.

 

பட்டுவண்ண உடையுடுத்தி

பட்டாம்பூச்சியாய் பறந்தவள்

பட்ட அவள் வாழ்வை எண்ணி

பரதேசியாய் அலைகின்றாள்.

 

சிலர் அவள்,

 

இடையழகைக் கண்டவர்கள்

இனியவளே, வாவா என்றனர் – அவள்

இடையூருக்கு உள்ளானதால்

இருமாந்து பார்க்கின்றார்.

 

பாதம் நோக வேண்டாமென்று

பாதையிலே பூ விதைத்தார்.

பதம்பார்த்த பாதம் கண்டு

பாதகன் ஓடி ஒளிகின்றான்.

 

வாசம் கண்ட நாளிலே

வண்ணப்பூச்சி வந்தது – அது

வஞ்சியாய் நின்றதாலே

வாஞ்சையோடு சென்றது.

 

கண்ணழகைக் கண்டு

எனக்கவள் என்றனர் – இன்று

கண்ணே இல்லாததால்

கண்டவர் பேசும் கல்லானாள்.

 

அவள் என்,

 

சிந்தனையில் வந்தவள்

சிரிக்க வைத்தவள்

சிந்திக்க வைத்தவள்

சிலையாய் நிற்கின்றாள்.

 

கண்டதெல்லாம் எழுதிட

கள்ளவன் துடிக்கின்றேன்.

கல்லான உன்னை யெண்ணி

கண்ணீரைச் சுரக்கின்றேன்.

 

தண்ணீர் இல்லையென்று

நாக்குறுட்டி நிற்பவரிடத்தில் – என்

கண்ணீரை மழையாக்கி

பன்னீராய்த் தந்திடவா?

 

வெண்ணிலா பார்க்கையில்

என்மனம் குளிர்ந்தது.

வெண்பாவையைக் கண்டு

வெலவெலத்துப் போனேனே

 

நிமிர்ந்து பார்த்து

நீயென்று நின்றேனே

நித்திரையில் விழுந்தவன்தான்

நீண்ட நாள் எழவில்லை.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா