இந்த நாட்டின்…
வாடும் இவர்கள்
இந்த நாட்டில்
வாழ்க்கையின்
பிரிதிநிதிகள்
ஆம், பிரதிநிதிகளே.
இவர்களில்…
முத்தாய்ப் பிறந்தார்
முத்தாய் வாழ்வோமென்று
முதல்வனின் மறுவுருவமே
– இன்று
முச்சந்தியில்
நின்றிருப்பதால்
இவர்கள் அச்சமேதுமில்லாமல்
சொல்லுகிறார்கள்
நாங்கள் என்றும்
பிளாட்பார கடைகளென்று.
பெற்றெடுத்த பிள்ளைகள்
பாதுகாப்பு இல்லாமல்
போனதால் – இன்று
பாராமலே போகின்றார்
பெற்றோரா என்று?
கேட்கின்றார்.
இவர்களும்
இந்த நாட்டின்
பிள்ளைகள்.
உண்மை யொன்றே
உயிரின் விலையென்று
உண்மையாய் வாழ்வார்
– அதற்கு
ஊண் ஒன்று
வந்துவிட்டாலோ
உலகிற்கே ஊமையாவார்
– அதிலே
உத்தமனே தானென்று
உறுதி செய்வார்.
இவரும்
இந்த நாட்டின்
பிள்ளைதான்.
பித்தர்கள் வாழும்
மத்தியிலே – கடவுள்
பித்தனாக கலைப்
பித்தனாக நான்
சித்தனாக இருக்க
சிந்திப்பே இல்லாமல்
சந்திப்பை அறுக்கவே
சந்தர்ப்பம் பார்க்கும்
இவர்களும்
இந்த நாட்டின்
பிள்ளைகள் தான்.
பெற்றோரில்லை
உறவினருமில்லை
என்று,
உறக்கம் கொள்ளாமல்
தனித்தே நின்று
தங்க வாழ்வு வாழும்
இவர்களும்
இந்த நாட்டின்
பிள்ளைகள் தான்.
நோக்க மொன்று
போக்கு மொன்று
சாக்கு வேறு சொல்லியே
சமாளிப்பார்
– அதுவே
வாழ்வின் வழியென்று
பாழ்படுத்திக்
கொள்வார்.
வாழ்வு என்னும்
பாதை
தம் காலடியில்
தாழ்ந்திருக்கிறதென்று
தக்கவாறே சமாளிப்பார்.
இவரும்
இந்த நாட்டின்
பிள்ளைதான்.
Comments
Post a Comment