என் உயிரே
புத்தகச் சுடரே
சிந்தனை மலரே
பூவின் இதழே அன்பின்
உருவே
பண்பின் நிழலே
பாவைக் குயிலே
பிரம்மன் படைப்பே
பவளக் கொடியே.
கற்பனைத் தேனை
கலையெனும் மானே
சிற்பியின் கலையை
சிந்தனை உருவே
சொல்லின் எழிலே
எழுத்தின் வடிவே
நிலவின் மரூஉவே
எந்தன் நினைவே
தரையின் மீனே
தங்கச் சிமிழே
எந்தன் மனதின்
சொர்ணத் தீவே
கோவையின் கனியே
சேரன் மகளே
மணியின் கூட்டே
வாழ்க்கையின் துணையே.
உயிரின் உட்பொருளாகி
உணர்வின் மரூஉவாய்
நின்று
செவிக்குத் தேனாய்
இருந்து
கவிக்குக் கருவானாயே
கைக்கிளையிலே
இருக்கின்றேன்
ஐந்திணையாக வருவாயோ?
உயர்திணையாக நானிருப்பேன்
Comments
Post a Comment