ஏனொளிந்துக் கொள்கின்றாய்?


காலை மலரில் பனித் துளிகள்

நாளை மலரில் பனி சொட்டும்

வீணே சொட்டும் பனித் துளிக்கு

அடிவேரு காத்திருக்கும்.

 

நீர் காணா செடிகூட

பசுமையோடு தானிருக்கும்

வானில் தெரியும் நட்சத்திரமும்

ஒளி மங்கி தானிருக்கும்.

 

நிலவின் முகமும் கூட

கனவில், காண்பது போலிருக்கும்

பல வண்ண வானம்கூட

ஓர் நிறத்தில் தான்தெரியும்.

 

சாமக்கோழி கூவையிலே

குரல்நடுங்கக் காண்கின்றேன்

ஆலயத்தின் மணியோசையும்

அலையோசையாய்க் கேட்கின்றேன்.

 

உழவனின் கைப்பிடியும்

மறுகைச் சாட்டையும்

ஒருங்கே சேர்ந்து

ஒலியெழுப்பக் காண்கின்றேன்.

 

தென்றலால் ஆடும் இலைகள்கூட

உன்னால்தான் நடுக்குகின்றது.

கல்லும் கூட அழுகின்றது

கனியும் கூட சிலிர்க்கின்றது.

 

அடங்காத இடமெல்லாம்

அடக்கியே ஆளுகின்றாய்

பார்க்கின்ற பொருளைக்கூட

உறைபோட்டு மூடுகின்றாய்.

 

விடியலிலே உலவிடும்

இளம் சிங்கங்களும்

இளமை திரும்பி

முதியோராகக் காண்கின்றேன்.

 

அருகுகளும் உன்னாலே

தினமும் குளிக்குது

குளித்துவிட்டு முத்துக்களை

எங்களுக்குத் தானளிக்குது.

 

காலை எழுந்து குளித்துவிட்டால்

உன் கொடுமை குறைந்துவிடும்

பாலைக் கறந்து குடித்துவிட்டால்

முற்றுமது பறந்துவிடும்.

 

இளஞ்சூரியன் வரும்போது

இளவோனோ

பல வண்ண நிறங்காட்டி

பல்சுவையோடு வரவேற்கும்.

 

காலைப் பொழுதுடையான் எதிரினிலே

வாய்க்காற்று பரவ விட்டால்

வாய்க்காலின் பக்கம்போல்

வண்டுபோல பறந்து போவாய்.

 

இளஞ்சூரியன் வரும்போது

ஏனொளிந்துக் கொள்கின்றாய்?

நீர் ஆண்ட இடமெல்லாம்

அப்பொழுதே மறைவதேன்?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா