எங்கும் காவல்
நாங்கள் உஷார்
என்ற காலம் மாறிப்
போனதால்
ஒவ்வொரு வீட்டு
வாசலிலும்
நாய்கள் ஜாக்கிரதை
என்றதொரு பலகை
தொங்கும்.
தங்கள் மீதே நம்பிக்கையற்ற
ஆண் மக்கள்
ஆன்மாக்கள் என்று
சொல்லியே
காவலுக்குக் கூர்க்காவை
நம்புகிறான்.
தென்றலுக்குத்
தடை விதித்து
ஜன்னலுக்குச்
சிறை வைத்து
சொகுசாக வாழ்வதற்குக்
குளுகுளுப் பெட்டி
அங்கே.
சுதந்திரம் இல்லாத
போது
வானில் ஊர்வலம்
வந்தது
சுதந்திரம் வந்ததுமே
பழி தீர்த்துக்
கொண்டோம்.
இன்று, வீட்டுக்
காவலிலே
சிறையும் வைக்கின்றோம்
போக்குவரத்து
இயந்திரமாக
வெண்புறா இருந்த
காலம் மாறிப்
போனதால்,
இன்று,
பார்வைப் பொருளாய்
சிறை வைத்தோம்
அதன் சிறகுகளுக்குச்
சுதந்திரம் பறித்தோம்.
அடிமை, இந்த நாட்டின்
பிறப்பிடமென்பதால்
மாற்றியமைக்க
முடியலே
மாற்றவும் முடியலே
யாருக்கும்…
மாற்றத் துணிவுமில்லை.
Comments
Post a Comment