நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
அந்தரத்தில் இரு
மீன்கள்
துடிக்கும் போது
– இந்த
ரத்தமேன் உறைந்து
போகிறது.
முகத்தில் முத்துக்கள்
வளரும் போதுதான்
– எனது
சொத்துக்கள் இழக்கின்றேன்.
ஆடையை நீ
குறைத்துக் கொண்டதாலே
பருத்திக்குப்
பஞ்சம் வந்ததோ?
காற்றால் அல்லல்படுமுன்
தாவணிபோல என்னியதமேன்
தூக்கில் தொங்குகிறது.
உன்னைப் பார்க்காத
ஒரு நாள்
இருந்திட்டதென்றால்
இவ்வுலகமே இருண்டுவிட்ட
நினைப்பு எனக்கு
அழகு மயிலுக்கே
உன்மீது
மயக்கம் வரும்போது
– நான் மட்டும்
விதிவிலக்கா என்ன?
கண்ணைப் பார்த்து
தலைவாரிக் கொள்ள
தலைகீழாய் நிற்கின்றேன்
– நீ
வளையாமல் நிற்பதேன்.
பார்ப்பவர்களை
எரித்துவிடும்
பாவை என்பதாலே
– பாவம்
இவனையும் எரிப்பதேன்?
சம்மதமின்றி அணுகும்
சஞ்சலக்காரன்
இல்லை – நான்
தங்கக் கம்பி
என்பது
தெரிந்திருந்தால்
என்னையும்
மற்றவர்களோடு
சேர்த்திடுவாயா?
Comments
Post a Comment