நானொரு பித்தன்
மல்லாந்து பார்த்தேன்
மல்லிகைப் பூ
– அது
மணம் வீசி
கனம் பெருகி
நின்ற தலையிலிருந்து
பூவையவள் எனக்கு
பூவை மாரியாக்கினாள்.
அதனாலே நான்
இப்பூவுலகில்
நிலையில்லாத
– என்
எண்ணங்களுக்கு
நிலைநிறுத்திச்
செல்லவே
அவள் வருவாளென்று
நிலவைப் பார்க்கும்
சூரியனாக நான்
அவளருகில் அமர்ந்திருந்தேன்.
அதற்கும், பொருமையில்லை
– என்
மனம் வாசத்தையே
வசந்தமாக்க நாடுவதேன்
Comments
Post a Comment