புறப்பட்டேன் புதிய உலகம் படைக்க

 

நான்

இருட்டில் இருந்து

வானத்தைப் பார்க்கிறேன்.

எங்கும்

ஒரே வண்ணம்

குழந்தையின்

மனதைப் போல.

அதோ

அங்கே

விளக்குப் பொறிகள்

ஒளிபடக் கண்டேன்.

முன்னே

தடையிலாது

அழகை இரசித்தேன்.

இப்பொழுது

எத்தனை தடைகள்

என்

அகத்தின் கண்கள்

தங்கத்தைப் பார்க்க.

அப்பப்பா….

இருந்தாலும்

முயற்சிக்கின்றேன்

ஒளியுடன்

வானைப் பார்க்கின்றேன்.

எத்தனை கோலம்

என்னென்ன வண்ணம்

எண்ணிப் பாராத

எதுகை மோனை போல

எத்தனை வண்ணங்கள்

வந்த வண்ணம் இருக்கின்றன.

பார்க்கிறேன்

பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்.

நிலையில்லாத

உன் வண்ணத்தைப் போல

மனிதர்களைக் காணுகின்றேன்

சிந்திக்கின்றேன்

சிந்தனையின் முடிவில்

அமைதி கொண்டேன்.

தெளிவும் பெற்றேன்

உறங்கி விட்டேன்.

விடிந்தது பொழுது

எழுந்தேன்

இதோ புறப்பட்டேன்

புதிய உலகம் படைக்க…

Comments

Popular posts from this blog

நிலா

பெருமை