விடிவு


அடியே கிளியே அருகில் வாயேன்

வாடிய உயிரைத் தடவிப் பாரேன் – நீ

தேடிய உயிரை நிறுத்தி வையேன்

சாடிய நெஞ்சைக் கொன்று விட்டே.

 

உறவைச் சொல்லி உரிமை கொண்டேன்

உரிமையை எண்ணி ஆசை கொண்டேன்

ஆசை யாலே ஒன்றைக் கேட்டேன்

தருவ தாக இசைந்து வந்தாய்.

 

தடைக் கற்களைக் கடந்து வந்து

நேர் வழியைப் பார்க்கின்றேன்

நேர் வழியின் குறுக்கினிலே

ஆசைக் கோடு தடை விதிக்கின்றது.

 

ஆசை வந்த வேளைதான்

மோச மானேன் நேற்றுநான் – நீ

தூப மிட்டாய் ஆசையினுக்கு - என்

தூக்கம் பறித்தாய் வேதனைக்கு

 

புத்தகத்தில் உன்னைக் காண்கின்றேன்

புழுவாகி நான் நெளிகின்றேன்

படிப்பதையே மறக்கின்றேன்

தேர்வினையே வெறுக்கின்றேன்

 

ஏன் காதலித்தோம் என்றெண்ணி

ஏங்கியே கிடக்கின்றேன்

ஏன் கேட்டேன் என்றெண்ணி

என் நெஞ்சைக் குத்திக் கொள்கின்றேன்.

 

அன்று ஏற்றிவிட்ட மெழுகு

இன்று, உருகிப் போனதே

திரி இல்லா நிலையிலே

ஒளி இழந்து நிற்குதே.

 

பெருகி வந்த ஆசை வெள்ளம்

உருகிய மெழுகைச் சார்ந்ததோ?

ஒளி இன்னும் வாராதோ?

எனக்கு, விடிவு என்பது கிடையாதோ?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா