ஏராளம்

 என் இதயம் கொண்ட

          இதயக் கனிகள்

          நாட்டில் ஏராளம் – இந்த

நாட்டில் ஏராளம்.

உன் உதயம் கண்டே

          துடிக்கும் இமைகள்

          பாரில் ஏராளம் – இந்தப்

          பாரில் ஏராளம்.

உன் வருகை கண்டே

          ஆடும் தென்றல்

          வாழ்வில் கும்மாளம் – அதன்

          வாழ்வில் கும்மாளம்.

உன் சிரிப்பைக் கண்டே

          முத்தைத் தேடும்

          கூட்டம் ஏராளம் – இங்குக்

          கூட்டம் ஏராளம்.

உன் இடையைக் கண்டே

          தென்றலை அழைக்கும்

          தேவர்கள் ஏராளம்.

உன் நடையைக் கண்டே

          அன்னம் மறந்த

          நடைகள் ஏராளம்.

உன் கூந்தலைக் கண்டே

          ஓடிய கரு மேகங்கள்

வானில் ஏராளம்  - அந்த

வானில் ஏராளம்.

உன் மூக்கைக் கண்டே

          கிளிக்கும் பொறாமை

         வந்தது ஏராளம்.

உன் விழியைக் கண்டே

           மறைந்த நிலவுக்கு

           மகிழ்ச்சி ஏராளம்.

உன் நெற்றியைக் கண்ட

            நேபாளத்திற்கு

            நேசங்கள் ஏராளம்.

உன் பாதம் கண்ட

           தேவதைக்கு

           பாதிப்பு ஏராளம்.

உன் காலைக் கண்ட

          வாழைக்கு

          வாழ்வு ஏராளம்.

உன் அழகைக் கண்ட

          அழகன் தோற்ற

           போட்டிகள் ஏராளம்.

உன் வாக்கு கேட்டே

           வாடிய மனங்கள்

           ஏராளம், ஏராளம்.

உன் வம்சம் கண்டே

           ஓடிய மனங்கள்

          அதிலும் ஏராளம்

உன் அன்பைக் கேட்டே

          துடிக்கும் இவன்

          ஆசை ஏராளம்.

உன் கையைத் தொட

           எனக்கு மட்டும்

           தடைகள் ஏராளம்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா