தமிழா, இப்படி இரு…
வாழ்க தமிழ் வாழ்க
தமிழ் என்று
எட்டுத் திக்கும்
பரப்பினால் மட்டும் போதுமா?
வளர்க தமிழ் வளர்க
தமிழ் என்று
வளருமென்று இருந்தாலே போதுமா?
செந்தமிழ் செந்தமிழ்
என்று
செருக்கோடு இருந்தாலே
போதுமா?
வான்தமிழ் வான்தமிழ்
என்று
வணங்காமல் இருந்தாலே
போதுமா?
ஆடிவரும் மயிலும்
– தமிழில்
இசை பாட வேண்டும்.
கலைந்து போகும்
மேகமும் – தமிழ்
இசைக்கு நிற்க
வேண்டும்.
தூணிலும் துரும்பிலும்
தமிழ் ஒலி கேட்க
வேண்டும்
துணிச்சலும் வீரமும்
பழைமை
கெடாமல் இருத்தல்
வேண்டும்
முட்டி மோதும்
காற்றுக் கூட – தமிழ்
ஒலியைத்தான் எழுப்ப
வேண்டும்
பொழுதெழுப்பும்
சேவலும் – தமிழ்
மொழியாலே கூவுதல்
வேண்டும்
சீறிவரும் பாம்பு
கூட – தமிழ்
இசைக்கு மயங்க
வேண்டும்
பொங்கி வரும்
கடலும் – தமிழுக்கு
வணக்கம் செலுத்த
வேண்டும்.
மதுவாலே மயங்கிவிட்டு
– தமிழ்
மதுவையே மறந்து
விட்டார்
பொது நூலாம் வள்ளுவத்தைப்
பொது நூலாக்க
மறந்து விட்டார்
இட்ட பல இதிகாசங்கள்
புகழ்மங்கி போவதேனோ
இன்னாரின் கற்கும்
நூல்கள்
அன்னாரின் காவிய
மன்றோ
படித்து மகிழ்ந்து
மடிவது – தமிழுக்குப்
பெரும் இழுக்கன்றோ
வடித்து எடுத்து
கொலுத்துவது – தமிழுக்கு
வரும் அழிவன்றோ
படித்து மகிழ்ந்து படிப்பித்தலே – தமிழுக்கு
அமுது அளிப்பதன்றோ
எத்திக்கும் பரப்பித்தாலே
– செந்தமிழில்
Comments
Post a Comment