திண்டாட்டம்
சோறுக்குத்
திண்டாட்டம்
சோதனை
என்ற சொல்லுக்குக்
கொண்டாட்டம்.
வயிற்றுக்குத்
திண்டாட்டம்
வறுமை
என்ற சொல்லுக்குக்
கொண்டாட்டம்.
வேலைக்குத்
திண்டாட்டம்
கவலை
என்ற சொல்லுக்குக்
கொண்டாட்டம்.
அடிமைக்குத்
திண்டாட்டம்
அக்ரமம்
என்ற செயலுக்கோ
கொண்டாட்டம்.
காவியத்திற்குத்
திண்டாட்டம்
கவிதை என்ற சொல்லுக்குக்
கொண்டாட்டம்.
Comments
Post a Comment