ரோஜா


சின்ன சின்ன ரோஜா

சிவப்பு வண்ண ரோஜா

சின்ன செடி மீது

ஜொலிக்குதந்த ரோஜா.

 

பாப்பீட்டும் புலவருக்கு

நாப்பீட்டித் தந்துவிடும்

காப்பீட்டும் தலைவனுக்கு

மாலை சூட்டி பார்த்திடுவோம்.

 

அழகுமலர் ரோஜா – பெண்கள்

கூந்தல் கேட்கும் ரோஜா

கலைகள் காட்டும் ரோஜா – அந்தக்

கிளையில் மலர்ந்த ரோஜா.

 

ஒரு நாள்,

 

கிளையில் தோன்றிய ரோஜாவைக்

காளை யொருவன் பறித்தானே

ஆத்தோரம் நின்று குளித்தான்

ஊசக்காற்று வீச நின்றான்.

 

தாரம் நினைவு வந்திடவே

தரணி பதைக்க ஓடுகின்றான்

தென்னை யோலை குடிசைக்குள்ளே

தேங்கித் தேங்கி அழுது நின்றாள்.

 

பெண்டு பிள்ளையும் சேர்ந்தழுக

இடியோசையும் மறைந்ததுவோ?

ஆசையோடு பறித்த ரோஜா

கையிலே அனாதையாக நின்றது.

 

செடியில் இருந்தால் செழித்திருப்பேன்

பார்ப்பவர்க்கெல்லாம் அழகாய் இருந்திருப்பேன்

எடுத்து விட்டான் குடும்பக்காரன்

கெடுத்துவிட்டான் என்னழகினை.

 

அழுத ரோஜா மலருமா

பறித்த கையும் நோகுமா

பிரிந்தால் ஆசை தீருமா

பிரிவே உனக்கு வேண்டுமா

 

ஆத்தோரம் மலர்ந்த ரோஜா

ஆடிக் காற்று ஊசையிலே

ஆசை தீர்க்க நேரமில்லை

அலையலையாய் ஆனதுவே.

 

விரிந்த கைவிரல் போலவே

ரேகை காட்டி நிற்கின்றாய்

விழிப்பை நோக்கும் பார்வையிலே

விடியலில் உன்னைக் காண்கின்றேன்.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா