அடங்கிய கீதம்
என்னைத் தொட்ட
தென்றல் – அவள்
மேனியையும் தொட்டது
நான்விட்ட மூச்சும்
– அவள்
தேகத்தைச் சுட்டது
அவளின் மௌனமொழி
– எனக்கு
விடை அளித்தது
நாங்கள் குளித்த
நீரும் – நித்தம்
கால்வாயில் சந்திக்கின்றன.
ஆனால், நாங்கள்
தான் – இன்னும்
சந்திக்கவில்லை.
நான் நடந்த பூமியில்தான்
அவளும் நடந்தாள்
அவள் பார்த்த
பின்தான்
நானும் பார்த்தேன்
என் பார்வை விழியிலே
அவள் நடந்தாள்
எங்களின் மௌனங்கள்
– அன்று
கீதம் பாடியது
– இன்று
Comments
Post a Comment