கூட்டல் எங்கே?
கூட்டம் கூடுவார்
கூடிப் பேசுவார்
கூட்டல் என்றால்
கும்மாளம் அங்கே?
யார் அவர்கள்
இந்த நாட்டின்
பெருமைகள்
சட்டங்கள் எல்லாம்
சகதியில் மிதிக்கப்பட்டு
சகதியிலே வாடும்
நமக்கு.
விடுதலை கிடைக்குமென்று
வீராப்போடு சின்னமேந்தி
விதி வீதியாய்ச்
சுற்றி
வெற்றி பெறச்
செய்து
சபைக்கு அனுப்பினோம்
– நம்
தலைவர் என்று.
அவர்கள்,
தலைவர்கள் அல்ல
தலைவார்கள் என்று
சபைக்குச்
சென்றதும்தான்
தெரிகிறது.
Comments
Post a Comment