புத்தொழில் கற்றிடுக
பந்தலிலே
பாகற்காய்
பார்க்கையிலே
கோவைக்காய்
கொடியிலே
புடலங்காய்
கொத்திலே
அவரைக்காய்
அவரைத்தான்
நன்றாய்
நாணிலத்தில்
கண்டேனே – என்
கனவினில்
கண்டேன்
அவன்என்
நாயகனே.
நாக்கினில்
புறலும்
நாதம்
எல்லாம்
நான்கு
எழுத்து
மந்திர
மானால்
நான்
என் செய்வேன்.
காலத்தால்
வந்த
காவியத்திற்கு
இங்கு
காவலே
இல்லை - அது
காணாமல்
போனதால்
காலத்தில்
வரும்
காவியத்திற்குக்
காவலே
காணாமல்
இங்கே
போவதால்
காவியத்தைக்
காணலே
அதைக்
காண நான்
காவியும்
உடுத்தலே
உடுத்தியும்
முடியலே.
நான்
என் செய்வேன்
நாயகனே?
நாடுகிறேன்
உன்னிடம்
கூறிடுவாய்
வழி தன்னை
என்
நாயகன் சொல்லுகிறான்
பூஞ்சோலைச்
சாலையிலே
பூத்துக்
குலுங்கும் மலரிலே
மொய்க்காத
வண்டொன்று
இருந்திட்டால்
சொல்லிடு.
பானுப்பிரியன்
வருகையிலே
பகடைகள்
உருளுவதுபோல்
பகலிரவு
என்றொன்று
இல்லை
என்றால் சொல்லிடு.
அந்தி
சாயும் வேளையிலே
அத்தை
மகள் வரவிலே
மது
என்றொன்று
இல்லையென்றால்
சொல்லிடு.
குயிலொன்று
கூவிவிட்டால்
குறத்தி
யொருவள்
குடிலிலே
தங்கியிருந்தா
மறவாமல்
சொல்லிடு.
பதிலைச்
சொல்லுகிறேன்
பக்தனே நானுனக்கு
என்று
சொல்லியே
தனியாய்
விட்டுவிட்டான்.
பதிலைத்
தேட நான்
தனிமையை
நாடினேன்
தனிமைக்குக்
கடலோரம்
தணிந்தே
வரவேற்றது.
நானமைதியாய்
அமர்ந்தேன்
அருகிலொரு
மலரைக் கண்டேன்.
ஆம்,
ரோசா
மலரைக் கண்டேன்
நேற்று
பூத்த மலரது
நேர்த்தியாய்
வந்த அது
நேரத்திற்கு
இடம் கொடுத்து
நேசத்திற்குப்
பரிதவித்து
பாவியாய்
இருக்கின்றது.
அதுபோல,
பாவமாய்
இருக்கின்றது – நம்
பா
வண்ணக் காவியங்கள்
நான்,
கடந்து
செல்லும்
கப்பலைக்
கண்டேன்
கலைந்து
போகும் – நம்
கலையினைக்
காண்டேன்.
அலைமகள்
என் காலுக்கு
அன்பு
முத்தம் கொடுத்திட்டே
ஆரவாரம்
செய்கின்றாள்
துள்ளிவரும்
குழந்தை போல,
தூக்கில்
தொங்கும்
காவியத்திற்கு
– நாம்
புத்துயிர்
கொடுத்திட
புத்தொழில்
கற்றிடுவோம்.
அத்தொழில்,
இரவின்
ஒளிக்கு
நிலவும்
நட்சத்திரமும் போல – நம்
வாழ்வின்
ஒளிக்கு
தட்டச்சும்
சுருக்கெழுத்தே.
Comments
Post a Comment