புரட்சிப் பயணம்
புரட்சிப்
பாதை இருந்ததுதான் – இன்று
புல்
முளைத்து இருக்குதய்யா - அங்கே
புதுப்பாதை
அமைத்திட
புதுமை
யொன்றைச் செய்திடுவோம்.
கற்றதிந்த
இடம்தான்
பெற்றதந்த
இடம்தான்
விற்றது
எல்லாரிடத்திலே
அற்றது
நம்முடலினிலே.
பெற்றார்
நம் சுதந்திரம்
பெருமையோடு
காப்போமென்றே
பெயரே
யில்லை அதற்கு – இன்று
அடிமையானது
சந்தத்திற்கு.
பெண்ணுக்கு
வேண்டும் விடுதலை – அதன்
பண்பே
கெட்டது சுதந்திரத்தாலே
சுத்தி
சுத்தி வந்திட்டால்
புதுமை
சுதந்திரம் வந்துவிடுமா?
காக்கவே
எடுத்திட்டோம், காலம்
கனியவே
இருந்திட்டோம் – காவலனே
கடல்
தாண்டிச் சென்றிட்டால்
அமைதி
எங்கே நாட்டினிலே?
தண்ணீர்
பருகவே நானென்று
தானியங்கியாக
டம்ளர் இருந்தது இன்று
அதுவே
கடைக்கு வந்திட்டதால்
கண்டவர்
தொடும் கல்லானது.
குடி
குடிலுக்குக் கும்மாளம் ஏது? – தினம்
குட்டிக்கரணம்
நடக்குதங்கே
குட்டிக்கரணம்
போட்டாலும்
புட்டிதானே
உள்ளாடுது.
மாது
வாழ மது வேண்டாம் தான்
மதுவை
மாதுவே ஆளுவதால்
மாற்றம்
தேவை இல்லைதான்
நாம்
மாறினால் ஒழிய.
அருந்துகிறான்
மதுவினை
ஆறு
நிமிடத்திலே
பல்லில்லா
குழந்தையாகிறான்
பாடுபல
படுத்துகிறான்
பண்பாடு
கெட்டு அலைகின்றான்.
இந்த
நிலை மாறிட
இருந்தே
சென்றிடுவோம்
புரட்சிப்
பயணம்…
Comments
Post a Comment