தெய்வம் உருவாகியது
சித்திரம் செய்தான்
ஒரு கலைஞன்
சிந்தனையில் வைத்தான்
ஒரு கவிஞன்
எட்டுத்திக்கும்
பரப்பிடவே
எடுத்து வைத்தான்
தெருவினிலே.
செல்லும் வழியே
ஒரு பாவி
செல்லாக் காசு
போட்டுப் போனான்
செல்லாக் காசை
எடுக்க வந்தவன்
சிலையைப் பார்த்து
மயங்கி நின்றான்.
சில்லரை இல்லே
கையிலே
சிலுக்கு ஜோபியும்
பார்த்தானே
சிந்தனை பண்ணிப்
பார்த்தானோ
எடுத்தக் காசைப்
போட்டானே.
வழியில் குருடன்
வந்தானே
முட்டி மோதி நின்றானே
கையை வைத்துப்
பார்த்ததுமே
சித்திரம் என்று
அறிந்தானே.
சில்லரை இல்லே
கையிலே
தடவிப் பார்த்தான்
பையிலே
சந்தம் வைத்துத்
தந்தானே
சரித்திரம் வகிக்கும்
ஒரு கவிதை.
கவிதை படிக்க
வந்தானே
காவியணிந்த ஒரு
முனிவன்
கவிதை படித்த
அம்முனிவன்
மெழுகாய் உருகிப்
போனானே.
புலவனை அழைத்து
வந்தானே
மண்டபத்தில் ஓர்இடம்
தந்தானே
சிலையை எடுத்து
வந்தானே
அலங்காரம் செய்து
வைத்தானே.
சிவனே என்று சொன்னானே
பூஜை பலமாய் செய்தானே
விழா ஒன்றை எடுத்தானே
விழாதவனும் விழுந்தானே.
செல்லாக் காசை
போட்டவனும்
விழுந்து விழுந்து
கும்பிடுகிறான்
நிழலை வேண்டி
ஒரு குடிசை
அவனே அமைத்துத்
தந்தானாம்.
ஆண்டு பல ஆனதுமே
கோபுரத்துள் வைத்தானாம்
கோடி மக்கள் போற்றிடவே
கோபுரங்கள் அமைத்தானாம்.
கடைசியில்,
புகழும் பல சேர்ந்திடவே
அறியாமையை நினைத்து
Comments
Post a Comment