வறுமை

வேலை தேடி நான்

ஏறியிறங்கிய படிகளின் எண்ணிக்கை

இந்த நாட்டு மக்கள் தொகையானதே

 

வேலை வெட்டி இல்லாமல்

வேடிக்கையாய் இருந்த எனக்கு

வேதனையின் அர்த்தம் புரிந்தது

 

விண்ணப்பப் படிவங்களையே

எழுதிக் கொண்டிருப்பதால்

பேனாவும் அழுது வடிகின்றது.

 

நான் அனுப்புகின்ற

விண்ணப் படிவம் மூலம்தான்

அஞ்சல் துறையே இயங்குகிறது.

 

படித்தபோது எழுதியதை விட

என் பேனா,

விண்ணப்பப் படிவங்களையே

பக்கம் பக்கமாய் வரைகின்றதே.

 

வரைபடத்திலே பல ரேகைக் கோடுகளை

வரைந்தும், கடந்தும் இருக்கின்றேன்

ஆனால்,

என் வறுமைக் கோட்டைத்தானே

இன்னும் கடக்க முடியவில்லை.

 

தேய்ந்த செருப்புகளையே

தேய்த்துக் கொண்டிருக்கும் எனக்கு

வாழ்வு தேய்பிறையே

நிரந்தரமானதோ.

 

தலைக்கு எண்ணெய்த் தடவி

நாட்கள் பல ஆனாலும் என்

முகத்தில் மட்டும்

தினம்தினம் வழிந்தோடுகின்றது.

 

என், ஆசைகளோ பலகோடி

வறுமை என்னும் பாசக்கயிறு – என்னை

துரும்பாக்கியே விட்டது.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா