மலராத காதல்
பூத்துக் குலுங்கும் மலரிது
பூக்காத மலரிது
புது வாழ்வைத் தேடுமிது
புதல்வனைப் பார்த்துச் சொல்லுது
கார்காலக் காலையிலே
கார்த்திகேயன் முன்னிலையில்
வாசம் வீடு வந்து
வசந்தத்தைத் தேடுது.
அந்த நேரத்தில்,
வைகையவள் வந்திட்டாள்
வாசத்திலே நின்றிட்டாள்
வம்சத்தைக் காட்டிட்டாள்
வாழ்வுதனைப் போக்கிட்டாள்.
இன்று,
மங்கை மனம் கவர்ந்திட்டே
மனம் கமழ எடுத்திட்டாள்
மாலையாகச் சூட்டிக்கொண்டு
மார்போடு அணைத்திட்டாள்.
மார்போடு அணைத்த வேளையில்
அணைய வைத்திட்டாள் – அவள்
அன்பை உதிர்க்கும் வேளையிலே.
மறுநாள்,
மாறுவேடம் கொண்டதாலே
மாதுக்கள் வெறுக்க நின்றேன்.
வெறுத்த வேளையிலே
பாங்காய் அமர்ந்திட்டேன்
பளிங்குக் குப்பைத் தொட்டிக்குள்ளே.
Comments
Post a Comment