கட்டு எதற்கு
சேற்றினில்
கிடைத்த
செந்தாமரை
– என்
சேவைக்கே
– நின்ற
பொன்
தாமரை.
அவள்
மேனிக்கு
மேக
வண்ணச் சேலையுடுத்தி
கார்
வண்ணக் கூந்தலுக்குச்
சரடுகள்
போல் பிணைப்புறுத்தி,
மீன்
வண்ணக் கண்ணிற்கு
நாண்போல்
மையலுறுத்தி
பத்துப்பல்
தெரியவே
முத்துப்
பல்லோடு
சிரித்து,
நிறுத்தி
மயிலாடும்
நடையிலே
உன்
சாயலைக் கண்டேன்
நின்றேன்,
அச்சுறுத்தி.
கொவ்வாய்
இதழுக்குக்
கோவையை
நான்
உனக்குடுத்தி
பஞ்சு
போன்ற கரங்களுக்குப்
பத்துப்
போட்ட காரணத்தைக்
கேட்டேன்
வலியுறுத்தி.
அவர்கள்
சொன்னார்கள்,
சாலையோரம்
சென்றவள்
சோலையைக்
கண்டாள்.
சோலையிலே
சேலை கண்டு
தனித்தே
சென்றாள்.
சேலையல்ல
காளை
என்றே
பாதையை
மாற்றினாள்.
வேலியில்லா
சோலையில்
காளையின்
தொல்லைக்குச்
சருகுகளும்
சம்மதிப்பதைச்
சரித்திரத்தில்
எழுத வேண்டும்.
கருவண்டு
பல பறந்து
கடித்தே
சென்றதால்
கட்டுப்
போட்டோம்
Comments
Post a Comment