இவனும் இந்நாட்டு மைந்தன்
உள்ளத்திற்கும்
உதட்டிற்கும்
உறவற்றுப் பேசிடுவார்
சொல்லுக்கும்
செயலுக்கும்
தொடர்பின்றிச் செய்திடுவார்
வாழ்க்கைக்கும்
வாழ்வதற்கும்
வழியற்று அலைந்திடுவார்
பிறந்த பயனையறியாத
வழியறியா அறிவாளி.
அவனின்,
சொல்லில் உள்ளது
செயலில் மலர்வதில்லை
உள்ளத்தில் உள்ளது
உதட்டில் பிறப்பதில்லை
சிந்தையில் உள்ளது
எழுதத் தெரிவதில்லை
செயலில் உள்ளது
சொல்லத் தெரியவில்லை.
Comments
Post a Comment