என்ன கதி?

 

உன்

நினைவாலே – உயிர்

வாழ்கின்றேன்.

 

என்

சுவாசமோ – உன்

பெருமூச்சு.

 

நான்

வாழ்வதே – உன்

ஒரு சொல்லால்.

 

நான்

நிலைத்திருப்பது – உன்

நினைவாலே.

 

உன்

இமைகளின்

நிழல்தானே – என்

குடியிருப்பு.

 

இன்று,

நான்

வாடுவதோ – உன்

பிரிவால்.

 

நான்

தேடுவதோ – உன்

இரு விழிகளை.

 

நினைவே

உன்

நிலை என்ன?

 

உயிரே

உன்

கதி என்ன?

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா