வீம்பானவள்
சிரித்து
வந்த சிங்காரி – என்
நினைவில்
வந்த அகங்காரி – அவள்
ராகத்தின்
உச்சியில் அமைந்து – என்
ரணத்திற்கு
அவள் மாற்றாவாள்.
கொவ்வாய்
திறந்து
கோவை
வா என்றாள்.
கண்ணாள்
எனைப் பார்த்து
மணி
யடித்தாள்.
பொன்மேனி
உனக்கென்று
பொக்கிசமே
படைத்தாள்
பொல்லாத
காற்று – அதை
அழித்தே
செல்லுதே?
காற்று
சென்ற திசையிலே
காவளாய்
நான் நின்றேன்
கனவிலாவது
வருவாள்
கன்னி
என்னவள் என்றே
கனவே
வரவில்லை
தூக்கம்
இன்மையால் – என்
தூக்கம்
பறித்துச் சென்ற
தும்பியே
திரும்பி வா.
தூரத்தில்
நானில்லை
சதுரத்தில்
நிற்கின்றேன்
சதுராட்டம்
வேண்டாமே
தாங்காது
என் மனம்.
வீட்டில்
பெரும்போர்
வீழ்த்தியே
வந்துள்ளேன்.
வீம்பு
எதற்கு இன்னும்
தப்பு
ஒன்றும் இல்லை
தப்பாமல்
வந்திடு – என்
தங்க
வண்ண மயிலே.
Comments
Post a Comment