தலைகீழ் தொடக்கம்
பாருக்குள்ளே
நல்ல நாடு – அதை
நினைத்தே வந்தது
வீடு
வீட்டுக்குள்ளே
ஒரு கூடு – அதைக்
கூட்டிவிட்டவரைப்
பாரு.
வானத்திலே ஒரு
நிலவு – அந்த
நிலவுக்குள்ளே
ஒரு வீடு
வீட்டுக்குள்ளே
இருளு – அதன்
ஒளியினை இங்கே
பாரு.
கானத்திலே ஒரு
சோகம் – அந்தச்
சோகத்திலே ஒரு
வீரம்
வீரத்திலே ஒரு
சாரம் – அது
போனபின்தான் விவகாரம்.
மலரினிலே ஒரு
புதுமை – அந்தப்
புதுமையிலே ஒரு
இளமை
இளமையிலே ஒரு
நிலைமை – அந்த
நிலைமை தானே வறுமை.
தென்றலிலே நலினம்
– அந்த
நலினத்தில் வந்தது
நடனம்
நடனம் நடப்பது
இங்கே – அதைப்
பார்ப்பவர்களெல்லாம்
அவரே.
கனவில் தெரிந்தது
சொர்க்கம்
சொர்க்கத்தில்
தெரிவது மாடி
மாடியில் வாழ்வதாய்
எண்ணி
தன்னில் ஆசைபல
எண்ணி
எண்ணி இருந்தாலந்தக்
கன்னி
அது, எல்லாம்
கனவென்று எண்ணி
எண்ணி எண்ணி ஏங்கி
Comments
Post a Comment