என்னவள் காதலிக்கு


முழு நிலவோ? முக்கனியோ?

தேனமுதோ என்று

ஆராய்ச்சி செய்யும் நேரத்தில்

அழைப்புமணி அடித்தாய்

அன்பே, உன் கண்ணசைவாலே.

 

அறுபத்து மூன்று சாத்திரங்களையும்

சிறைவைத்துக் கொண்டாயோ?

உன்விழி, கருமணிக்குள்ளே.

 

சாத்திரப் புலவர்களுக்குச்

சாதகம் கொடுத்தவளே

நீதான், என் காதலி. 

 

ஆம், காதலியே

நான் காதலிப்பது – இதுவரை

பேனாவிற்கும் பேப்பருக்கும்

சொந்தமாக்கினேன்

ஆனால், இன்று…

 

உன் பார்வை என் மேனியை

அலங்கரிக்கும் போதுதான்

தென்றலின்

சுகத்தையே காணுகிறேன்.

 

உன்னிதயக் கோயிலில்

அபிஷேகம் செய்ய வந்தால்

தீண்டாமை விலங்கு ஏன்?

 

என் வரவிற்குத்

தடைக்கற்கள் போட்டாலும்

உன் பார்வை பட்டாலே

தாழம்பூ வாகாதோ?

 

என்னை நீ விரும்புவது

என்றைக்கோ தெரிந்திருந்தும்

எதிர்ப்பார்த்து நிற்பது

உன் கடிதத்தைத்தான்.

 

என்னிதயத்தில் ஓர்

தாஜ்மஹால்

உன்னால் எழுந்தது.

 

நித்திரை நேரத்திலே

நித்தம் நினைக்கின்றேன்

நீதான் நினைவினிலே.

 

தூக்கம் இன்றி

தவிக்கின்றேன்

தூங்க வைக்கமாட்டாயோ?

 

நான் நித்தம்

கண் விழித்திருப்பது – உன்

நித்திரையைக் களைப்பதற்கல்ல

காப்பதற்கு

 

கனவினிலே உருவெடுத்து

கர்ப்பனையாலே அழகுபடுத்திக்

கவிதையொன்றை எழுதுகின்றேன்

என்னவள், காதலிக்கு.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா