முத்தம்
முத்தம் தரும்
சத்தம்
பத்தும் செய்யும்
என்று
முத்தும் சிப்பியும்
போல
முகம் புதைத்து இருப்போம்
சற்றும் ஓசை இன்றி
நான் கொடுத்த
முத்தம்
நித்தம் அவளுக்கென்றே
(வேறு)
நிலவு
எல்லாவற்றிற்கும்
முத்தம் இடுகின்றது.
ஆனால்,
எனக்கும்
என்னுடன் சேர்ந்த
இருளுக்கு மட்டும்?
ஓ…
இருளும் நானும்
உன்னைத் தொடாது
வாழும்
Comments
Post a Comment