பொங்கல் வாழ்த்து
கரும்பைப்
பிளந்து
சர்க்கரை
போட்டு
மூடி
வைத்தார் போல்
உங்கள் வாழ்க்கை
இரட்டை
இனிப்புடன்
எந்நாளும்
இருக்க
இந்தப்,
பொன்னாளில்
வாழ்த்துகிறேன்.
💘
எட்டும் பத்தும்
சங்கமாகும்
சங்கமமைத்தல்
இன்பமாகும்.
பாட்டும் பொருளும்
சங்கமமாகும்
சமயம் பார்த்து
இன்பமளிக்கும்.
தாயும் சேயும்
படிப்பூட்டும்
தவறும் பொழுது
நினைப்பூட்டும்
உழவும் தொழிலும்
உயர்ந்து நிற்க
வருகதிரை வணங்கிடுவோம்.
புத்தரிசி பொங்களிடையே
புத்தாண்டு களிப்பிருக்கும்
கோவையான இனிப்பினிலே
– ஒரு
மணியாய் வாழ்த்துகின்றேன்.
💘
கண்ணாடி
போல் ஒளிரும்
தண்ணீரின்
மேனியிலே
தலைவாரிக்
கொள்வதற்குத்
தாமரைப்பூ
நின்றிருக்கும்.
பொங்கல்
புதுநாளில்
புதுவரவு
சொல்லுதற்கும்
பொலிவாக
வாழ்த்துவதற்கும்
இம்மடலோ
இதழ்விரிக்கும்.
மன்னாதி
மன்னனும்
மண்ணின்
மேனியிலே
தன்மேனி
படுதற்குத்
தவமுடன்
நின்றிருப்பான்.
💘
தித்திக்கிறதா
உம் வீட்டில் பொங்கல்
தித்திக்கிறதா
சொல்லுங்கள் – அந்தத்
தித்திப்புடனே
என் வாழ்த்தும் உன் நெஞ்சிலே
தித்திக்க
நான் சொன்னேன் வாழ்த்து.
💘
தைத்
திங்கள் தன்னில் முதல்நாளாம் பொங்கலிலே
எத்திக்கும்
தங்கள் புகழ் மணக்க
தித்திக்கும் செந்தேன்போல்
வாழ்க்கை
என்றும் இருக்க
எந்தன்
மனமார்ந்த வாழ்த்து.
💘
இரும்பு
தோற்கும் உறுதி வேண்டும்
எறும்பு
தோற்றும் உழைப்பு வேண்டும்
கரும்பு
தோற்கும் இனிமை வேண்டும்
அரும்பு
தோற்றும் மென்மை வேண்டும்
ஆடி
வந்த பொங்களின்று
கூடிச்
செல்வம் கோடிபெற
அகமகிழ்ந்தே
வாழ்த்துகின்றேன்
அன்போடு
வார்த்தை சொன்னேன்.
💘
தரணிக்கெல்லாம்
பொதுவிழா
பொங்கல்
என்ற பொன்விழா
பூமித்
தாயின் புகழ்விழா
ஓயாது
உழைத்த உழவுக்கே
உள்ளம்
மகிழ்ச்சி யூட்டுவிழா
உதயம்
கதிரோன் உதவிக்கு
உழவர்
நன்றி காட்டும் விழா.
💘
உள்ளத்தில்
குழந்தையாய்
எண்ணத்தில்
இனிமையாய்
வாழ்க்கையில்
பெருமையாய்
துன்பங்கள்
நீக்கி
இன்பமாய்
வாழ்ந்திடுக.
💘
இருள் விலகக்
கதிரெழுந்து
இமை திறந்து நோக்குது
வறுமை வாட்டும்
துன்பமெல்லாம்
வலிவிழந்தே விலகுது
– கதிர்
உழைத்தவர் பிழைத்திடக்
களித்தெழுந்தே
ஓங்குது
வந்த பொங்கல்
வரவிலே – நீவீர்
வாழ்க என்றும்
வாழ்த்தினேன்.
💘
நினைவில் இருந்த
தம்பி தங்கை
நின்று நின்னை
வாழ்த்தவே எழுதினேன்
நின்னையும் என்னையும்
ஒப்பிட்ட வயதை
நினைத்து நின்ற
பொங்கல் நாளிலே
ஏழு ரெண்டு ஆண்டு
செல்வியே
என்வய தடையா அருமைத்
தங்கைகள்
தம்பியன் ஓரிரண்
டாண்டில் ஓரவி
தத்தளிக்கும்
வண்ணம் இருக்க
தங்க ளண்ணன் கூறும்
பொங்கல் வாழ்த்தே.
Comments
Post a Comment