நான் நடத்தும் கலியாணம்

 

நான் நடத்தும் கலியாணம்

ஊரே பார்த்து வியக்குது

எங்க ஊரு பண்ணையாரு

எழுந்திருக்க முடியலே.

 

வானான பந்தலுக்கு

மேகங்களே மட்டைகளாம்

ஜோரான  பந்தலுக்கு

நட்சத்திரங்களே மின்விளக்கு.

 

பந்தல் காலுக்கு

ஆலமரத்து விழுதுகளாம்

வரவேற்பு பலகையிலே

பொருந்தா பூச்செண்டுகளாம்.

 

முக்காதம் பாட்டுக்கு

முக்குயிலை நாவெச்சேன்

இரவுக் கச்சேரிக்குத்

தவளையைத் தான் வெச்சேன்.

 

வந்த விருந்தாளிக்கு

வகையாய்ச் செஞ்சு வெச்சேன்.

தங்கக் கிண்ணியிலே

சோறு போட்டேன்.

 

நானேறும் வாகனமே

வானேறும் விமானமே

வீணேயேன் சுத்தர

விருந்துக்கு வந்துவிடு.

 

மூக்குத்தி மூக்குக்கு

முந்நூறு பவுனிலே

கம்மலு காதுக்கு

முந்நூறு பவுனிலே

கொலுசு காலுக்கு

கொத்துமணி தங்கத்திலே.

வளையல் கையிக்கு

வார்த்தேன் தங்கத்திலே

கழுத்து மாலைக்கு

உருக்கினேன் தங்கத்தை

தாலி கயித்துல

முத்துமணி தான்கோர்த்தேன்.

ஒன்பது பவுனிலே

நான் செஞ்சேன் மாங்கல்யம்

விரலே மினுமினுக்க

பத்து விரலும் மோதிரமாம்

மாப்பிள்ளைக்கு – நான் போட்டேன்

பத்து விரலும் மோதிரம்.

 

மடிப்பான வேட்டி கொடுத்து

மடிமேலே மகளை வைச்சு

நான் செய்த கலியாணம்

நாடே வியந்த கலியாணம்.

 

நிலவை இந்திரக்கு

நான் முடித்த கலியாணம்

இமயத்தில் வீடுகட்டி

தனிவீடு அமைத்து வந்தேன்.

 

பதினாறும் பெற்று வாழ

நான் நின்று வாழ்த்துகிறேன்.

 

நான் நடத்திய கலியாணம்

ஊரே பார்த்து வியக்குது

எங்க ஊரு பண்ணையாரு

எழுந்திருக்க முடியலியே.

Comments

Popular posts from this blog

மரமே உனக்கு உல்லாசம்

நிலா