நாங்கள் பட்ட தொல்லை…

நீதி வேண்டும் நாட்டிலே – அதற்கு

நிற்க வேண்டும் ரோட்டிலே

ரோட்டில் நின்ற எல்லாரும்

ரொட்டி தேய்க்க வேண்டியதுதான்.

 

மாணவர்விடும் மூச்சு – இன்று

திசைமாறிப் போச்சு.

வாய்ப்பேச்சு எல்லாம்

இன்று பொய்யாச்சு.

 

பட்டங்களிங்கு பறக்கு ஆபீசுலே

பட்டம் பல பெற்றாலும்

பயிற்சி பல பெற்றாலும்

பல்லவி இன்னும் மாறலே

பட்டினியும் தீரலே

பற்று இல்லை நாட்டிலே

பட்ட தொல்லை தீரலே.

Comments

Popular posts from this blog

நிலா

பெருமை