முடிவல்ல ஆரம்பம்
அவள் சிரிக்கும் பொழுது
பாண்டிய நாட்டில்
காணாமல் போன
முத்துக்கள் எல்லாம்
அவள் இதழோரம்
மின்னக் கண்டேன்.
மது அருந்தினால்தான்
மயக்கம் வரும்
என்கிறார்கள்.
மாதுவே, எனக்கு
மட்டும் ஏன்
உன் கண்களைப்
பார்த்ததும்…
தவறவிட்ட மாணிக்கக்
கற்கள்
உன் கண்களில்
தான்
கொலு விற்றிருக்கின்றதோ?
உன் கூந்தலில்
பூச்சூடினாலும்
அதன் வாசம்
வீச, மறுப்பதேன்?
உன் கழுத்தில்
இருக்கும்
பொன் நகைகளைவிட
புன்னகைக்குத்
தான்
என் பேனா தாளம்
போடுகின்றது.
மை விழியோரம்
உன் பார்வையைச்
சுழற்றும் போது
இந்த உலகத்தையே
நான், அங்கே காண்கின்றேன்.
உன் பார்வைக்கு
ஆயிரம் கவிதை
எழுத
என் மனம் துடிக்க
என் பேனா மறுக்க
போராட்டம் நடத்தியே
குருதி மை கொண்டு
எழுதுகின்றேன்…
தொடர்கதை தானே
இது என் வாழ்வில்
முடிவல்ல ஆரம்பம்…
Comments
Post a Comment