பாசக் கயிறு
கார்முகிலை;க
கருங்காட்டை நித்தம்
பகலாக்கி
வெண்நிலவே, நீ
வந்தாய்.
ஆதவனின் ஆதிக்கத்திற்கு
அரிச்சுவடி தந்து
தமிழே, நீ வாழ்கின்றாய்.
ஆலமரத்தடிக்கு
ஆளும்
விழுதுகள்தான்
ஊன்றுகோல்
சகோதரியே,
உன் ஆனந்த வாழ்க்கைக்குக்
கணவனே ஊன்றுகோல்.
நீயுலகைச் சுற்றலாம்
உலகம் உன்னைச்
சுற்றலாம்
உன்னைச் சுற்றியிருப்பது
கணவனின் பாசக்
கயிறு.
Comments
Post a Comment