இதுவும் இயல்புகளே…
மாலை வந்த வேளை
மாறியதே
இயற்கையின் இயல்புகள்
பல.
களைப்பால் வந்த
உழவர்க்குப் பல
கலைப்பொருளாக
நின்று
கணவனை மகிழ்விப்பாள்
கண்ணியமான அவன்
மனைவி.
என் விழியைத்
தாக்கும்
தன்மை பெற்ற
உனக்கு மட்டும்
நான்
தஞ்சம் அடைகின்றேன்.
பகலெல்லாம் சளைக்காமல்
உழைத்த எனக்கு
வசந்தமாய் இருக்கின்றாய்
வசந்தத்தில் மிதக்கின்றேன்
– நான்
இதுபோலத்தான்
கதிரவன் எதிரொளியை
மக்கள், தாங்கமாட்டார்கள்
என்றுதான்
நிலவது வந்திடும்
கதிரது மறைந்திடும்
நிலவு குடியிருக்கும்
இல்லத்திலே.
அப்போது,
இயற்கையின் இயல்புகள்
பல.
வேதனையோடு
வீட்டிலிருந்த
வீம்புப் பிள்ளைக்கு
முழுச் சுதந்திரம்
வந்தது
அதனாலே,
வீதிக்குச் சென்றது
ஆசை தீர
விளையாடியது.
பகலெல்லாம் வாடிய
மலருக்குத்
தென்றலாக தன்
மூச்சை அளித்து
தெம்பூட்டியே
நிற்கின்றது.
அப்போது,
எங்களுக்குத்
தென்றலாகத் தன்
வாசத்தையே எங்களுக்களித்து
தங்களுக்கு எங்களைத்
தர்க்கமாக்கிக்
கொள்ளும்
தாரகச் சக்தி
எப்படி வந்தது.
இதுவும்
இயற்கையின்
இயல்பிலொன்றோ?
Comments
Post a Comment